மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள்!

credit: freepik
பாதாம்: இது கொழுப்புச் சத்துக்கள் மற்றும் புரதச் சத்துக்கள் நிறைந்த உணவு மட்டுமல்ல. ஒரு அவுன்ஸ் (28 கிராம்) பாதாமில் 76 மில்லி கிராம் மெக்னீசிய சத்துக்களும் நிறைந்துள்ளது.
credit: freepik
டார்க் சாக்லெட்: ஒரு அவுன்ஸ் (28 கிராம்) டார்க் சாக்லெட்டில் 64 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இது உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்டுகளையும் கொடுக்கிறது. மனநிலையையும் அமைதிப்படுத்தும்.
credit: freepik
பாலக்கீரை: ஒரு கப் சமைத்த பாலக்கீரையில் 157 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இரும்பு, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்டுகளும் நிறைந்துள்ளன.
credit: freepik
அவகேடோ: ஒரு மீடியம் அளவு அவகேடோவில் 58 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. பொட்டாசியச் சத்துக்களும், இதயத்துக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புச் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன.
credit: freepik
கருப்பு பீன்ஸ்கள்: புரதச்சத்துக்கள் நிறைந்த கருப்பு பீன்ஸ்களை ஒரு கப் எடுத்துக்கொண்டால், அதில் 120 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
credit: freepik
வாழைப்பழம்: இதில் பொட்டாசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு பழத்தில் 32 கிராம் மெக்னீசியச் சத்துக்களும் நிறைந்துள்ளது. குறிப்பாக உடற்பயிற்சிக்கு முன்னரும், பின்னரும் சாப்பிட ஏற்றது.
credit: freepik
குயினோவா: சமைத்த ஒரு கப் குயினோவாவில், 118 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளது. செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கும் ஒரு உணவாகும்.
credit: freepik
Explore