வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
வாழைப்பூ ஏராளமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. ஆனால் பெரும்பாலான மக்களுக்கு வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் தெரியாததால், அதனை சமைப்பது இல்லை. எனவே, வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும்.
ரத்தநாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்களை தடுக்கக்கூடும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது.
வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.
வாய்ப்புண், வாய் துர்நாற்றத்தை நீக்கும் ஆற்றலும் வாழைப் பூவிற்கு உண்டு.
மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் ரத்தம் வெளியேறுதல், உள் மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் வந்தால் பிரச்சினை விரைவில் குணமாகும்.
வாழைப்பூவை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும். ஏனெனில் வாழைப்பூவில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.