ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் தாமரை விதை (மக்கானா).!

இதில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது ஆரோக்கியமான உடல் எடைக்கு வழிவகுக்கும்.
மக்கானாவில் பிளேவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதில் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீடு உள்ளன. இது ​ரத்த சர்க்கரை அளவை மேம்படுத்தக்கூடும்.
இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கக்கூடும்.
மக்கானாவில் அதிகளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
மக்கானா தாவர அடிப்படையிலான புரதத்தை அதிகளவு வழங்குகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவக்கூடும்.
மக்கானாவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கக்கூடும்.
மக்கானாவில் தியாமின் உள்ளது, இது அறிவாற்றல் செயல்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகிறது.