இலவங்கம் (கிராம்பு) சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

இலவங்கம் (கிராம்பு) சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Published on
உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பல்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தடுக்கக்கூடும்.
கிராம்பில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
கிராம்பு சாப்பிடுவதால் அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீருவதோடு ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவி செய்யும்.
கிராம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
கிராம்பு ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.
இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com