கண்களை பாதுகாக்க இந்த 7 உலர் பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்க!
credit: freepik
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் அதிகம் பயன்படுத்துவதால் கண் சம்பத்தப்பட்ட பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகின்றன. அதற்கு இடம் கொடுக்காமல் கண்களின் பார்வைத் திறனை மேம்படுத்த உட்கொள்ள வேண்டிய உலர் பழங்கள் பற்றி பார்ப்போம்.
credit: freepik
முந்திரி: முந்திரியில் துத்தநாகம் நிறைந்துள்ளது. அத்துடன் அதிலிருக்கும் லுடீன், ஜியாசாந்தின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது. வயது தொடர்பான மாகுலர் சிதைவு மற்றும் கண் சார்ந்த நோய்த் தொற்றுகளை தடுக்கக் கூடியது.
credit: freepik
வால்நட்ஸ்: இதிலிருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கண் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு அளிக்கக்கூடியது. கண் செல் சவ்வுகளை பராமரிக்கவும் உதவிடும். கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். கண் வீக்கத்தையும் குறைக்கும்.
credit: freepik
பாதாம்: வைட்டமின் ஈ நிறைந்த பாதாம், கண்களை பிரீ ரேடிக்கல் சேதத்தில் இருந்து பாதுகாக்கும். மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை அபாயத்தை குறைக்கும். மேலும் கண்களின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், உலர் கண் நோய்களை தடுக்கவும் உதவிடும்.
credit: freepik
உலர் திராட்சை: எந்த நிற உலர் திராட்சையாக இருந்தாலும் அதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் ஏ, சி போன் றவை ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியவை. இரவு நேர குருட்டுத் தன்மையையும் தடுக்கக்கூடியவை.
credit: freepik
உலர் பேரீச்சை: இதன் இயற்கையான இனிப்பும் கண் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கிறது. அதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவும். நீரிழிவு தொடர்பான கண் பிரச்சினைகளை தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
credit: freepik
ஆப்ரிகாட்ஸ்: உலர்ந்த ஆப்ரிகாட்ஸ் பழங்களில் வைட்ட மின் ஏ அதிகளவில் காணப்படும். இவை விழித்திரை ஆரோக்கியத்தில் பங்கு வகிப்பவை. இரவு நேர குருட்டுத்தன்மையை தடுப்பதற்கும் உதவுபவை.
credit: freepik
பிஸ்தா: இதிலும் லுடீன் மற்றும் ஜியாசாந்தின் இருப்பதால் முந்திரிக்கு இணையான நன்மைகளை வழங்குகின்றன. மேலும் அதிக ஆற்றல் கொண்ட ஒளி அலைகளுக்கு எதிராக கண்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றன, வயது தொடர்பான கண் நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.