கூல் & ஹெல்தி… வெள்ளரிக்காய் ஜூஸின் ரகசிய நன்மைகள்!
வெள்ளரிக்காய் ஜூஸில் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இந்த ஜூஸை ஒரு நாளைக்கு ஆண்கள் 3 கப்பும், பெண்கள் 2.5 கப்பும் சாப்பிட்டால், ஒரு கப் காய்கறிகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளானது கிடைக்கும்.
வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, பி காம்ப்ளக்ஸ், சி மற்றும் கே ஆகியவை அதிகம் உள்ளது. உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.
கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். எனவே இத்தகைய வெப்பத்தை குறைக்க வெள்ளரிக்காய் ஜூஸை குடித்து வருவது நல்லது.
வெள்ளரிக்காய் ஜூஸ் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.
வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ இருப்பதால், இதனை குடித்து வர கண்களில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால், ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸ் உடல் எடையை குறைக்க உதவும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வாருங்கள்.
தினமும் ஒரு டம்ளர் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், ஒரு நாளைக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைக்கும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காயில் உள்ள சிலிகான் என்ற மினரல் உடலின் இணைப்புத் திசுக்களுக்கு போஷாக்கு அளிக்கும். இதனால் சருமம் பொலிவாக, சுருக்கங்கள் இல்லாமல் இருக்கும்.