ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டியவை!

ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும்போது மேற்கொள்ள வேண்டியவை!

Published on
சபரிமலை செல்பவர்கள் ஒருமண்டல காலம் (48 நாட்கள்) விரதம் இருக்க வேண்டும்.
கருப்பு, நீலம், பச்சை, காவி போன்றவற்றில் ஏதாவது ஒரு நிற வேஷ்டியையும்,சட்டையையும் அணிய வேண்டும்.
கார்த்திகை முதல் நாள் பெற்றோர்களை வணங்கி அவர்களின் அனுமதி பெற்று குருசாமியின் கரங்களால் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.
அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி ஐயப்பனை 108 சரணம் கூறி பூஜை செய்ய வேண்டும். இதேபோல சூரியன் மறைந்த பின்பு மாலையில் நீராடி 108 சரணம் கூறி ஐயப்பனுக்குப் பூஜை செய்ய வேண்டும்.
இரவில் தூங்கும் போது தலையணை, மெத்தை உபயோகிக்க கூடாது. பகலில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
பிரம்மச்சரிய விரதத்தை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது மனோ வலிமையைப் பெருக்கி மனித வாழ்க்கையை உயர்த்துவதற்கு உதவுகிறது.
திரிகரண சுத்தி (மனம், வாக்கு, செயல்) ஆகிய வற்றில் கவனமாக இருக்க வேண்டும். ஐயப்பனை எண்ணத்தில் எப்பொழுதும் மனதில் நினைத்து, பக்திப்பூர்வமாக அய்யன் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தால் எண்ணங்கள் தூய்மையாகும்.
சைவ உணவு மட்டும் உண்ண வேண்டும். மது அருந்தக் கூடாது. பீடி, சிகரெட், பான்மசாலா போன்றவற்றை அறவே நீக்கி விட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com