டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன.
டிராகன் பழத்தில் வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பழம் உடலில் வெள்ளை ரத்த அணுக்களைப் பாதுகாக்கவும், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதில் ஒலிகோசாக்கரைடுகள் எனப்படும் கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவு நிறைந்துள்ளன. இது செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் அபாயத்தை தடுக்கிறது.
இது குடல் இயக்கத்தை மேம்படுத்தி, இரைப்பை குடல் பிரச்சினையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த பழத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளன. இது சருமத்தை பிரகாசமாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது.
இதில் உள்ள இரும்புச்சத்து முடிக்குத் தேவையான ஆக்ஸிஜனை அதன் வேர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இதனால் கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாறுகிறது.
டிராகன் பழம் உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்க உதவுகிறது. இதனால் ரத்த சோகை, ஸ்கர்வி போன்ற நோய்கள் நம்மை நெருங்காமல் பாதுகாக்க முடியும்.
இதில் பிளாவனாய்டுகள்,பீனாலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.