கொடுக்காப்புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொடுக்காப்புளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Published on
இந்த மரங்கள் பொதுவாக சாலை ஓரங்களில் அல்லது காடுகளில் இருக்கும். இதனை ஜங்கிள் ஜிலேபி என்றும் அழைக்கின்றனர்.
கொடுக்காய்ப் புளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி 1, பி 2, பி 3, வைட்டமின் கே, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், சோடியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கொடுக்காய்ப் புளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து , குடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வாகும்.
சருமத்தில் ஏற்படும் தோல் அழற்சி, வீக்கம், அரிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாத்து சரும ஆரோக்கியத்தை பராமரிக்க கொடுக்காய்ப் புளி சிறந்து விளங்குகிறது.
இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
உடலில் உள்ள கொழுப்பைக் குறைத்து குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோய் அபாயத்தை குறைகிறது.
கொடுக்காய்ப் புளியில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
கொடுக்காய்ப்புளி உடலில் உள்ள மொத்த சீரம் மற்றும் மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன்முலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com