தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன.
ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், காப்பர் உள்பட பல சத்துக்கள் களாக்காயயில் உள்ளன.
களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
தலை முடியை வலிமையாக்கும், கூந்தலை ஆரோக்கியமாகவும், நீளமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
பெண்களுக்கு கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த பெரிதும் உதவக்கூடும்.
களாக்காயில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், இவை அடிவயிற்று வலியை சரி செய்து, ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
களாக்காயில் இரும்புசத்து அதிகளவில் காணப்படுகிறது. இது உடலில் ரத்த சோகை பிரச்சினை வராமல் தடுக்கக்கூடியது.