கொஞ்சம் குறைச்சிக்கோங்க..அதிக டீ அதிக பாதிப்பு.!!

டீ குடிப்பது மக்கள் பலரின் அன்றாட பழக்கமாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது. அளவுக்கு அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் பாதிப்புகளை பற்றி அறிந்து கொள்ளவும்.
அலுவலகத்தில் பணிபுரியும் நபர்கள் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தால், அந்த நேரத்தில் அவர்களுக்கு டீ குடித்தால் தான் பணி செய்ய முடியும் என்ற மனநிலைக்கு கூட செல்கின்றனர்.
அதிக அளவில் டீ குடிப்பதால், அதில் இருந்து வெளியாகும் அதிக அளவிலான நச்சுக்களால் கவன சிதறல், அமைதியில்லாமல் போவது, உறக்கம் கெடுதல், போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
டீ அதிக அளவில் குடித்தால் அதிலுள்ள டானிஸ் வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து சேராமல் தடுக்கக்கூடும். இது உடலில் ரத்த சோகை பிரச்சினைக்கு வழிவகுக்கும்.
புற்றுநோய்க்கு மிக முக்கியமாக தரப்படும் கீமோ தெரபி நாம் கொடுக்கும்போது சிகிச்சை பலன் தராது. காரணம் அதிக அளவில் டீ குடிப்பதால், கீமோதெரபி மருந்துகள் உடலில் வேலை செய்யாதவாறு தடுத்து நிறுத்துகிறது.
டீ குடிப்பவர்களுக்கு 40% மூட்டுவலி ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். மேலும் டீ எலும்பின் உறுதிக்குத் துணைபுரியும், ஆனால் எல்லை மீறும் போது எலும்பின் உறுதி தன்மையை பாதிக்கிறது.
புராஸ்டேட் புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.
Explore