ஒரு மாதம் சைவ உணவை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!
Photo: MetaAI
சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. ஒரு மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக அசைவ உணவையும் புறக்கணித்துவிட்டு சைவ உணவை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
Photo: MetaAI
செரிமான செயல்முறை: சைவ உணவு தாவர அடிப்படையிலானது. அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது செரிமான செயல்முறையை மேம்படுத்தும். மேலும் தாவர அடிப்படையிலான சைவ உணவு மலச்சிக்கல் பிரச்சினையை கட்டுப்படுத்தும்.
Photo: MetaAI
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது; சைவ உணவுகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவும். மேலும், இது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தையும் குறைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
Photo: MetaAI
கொழுப்பைக் குறைக்கும்: சைவ உணவுகளில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதற்கு உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. சைவ உணவை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்டரால் அளவை சீராக பேண முடியும்.
Photo: MetaAI
நாள்பட்ட நோய்களை குறைக்கும்: சைவ உணவை உண்பதால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Photo: MetaAI
அழற்சியை கட்டுப்படுத்தும்: இறைச்சி சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அழற்சி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. சைவ உணவை சாப்பிடுவது அழற்சி சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.
Photo: MetaAI
உடல் எடையை குறைக்கும்: தாவர அடிப்படையிலான இந்த உணவுகள், இறைச்சி உணவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளன. மேலும் சைவ உணவு வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். அதனால் பசியை குறைக்க உதவும்.
Photo: MetaAI
ஆற்றலை அளிக்கும்: தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலிலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச்செய்யும். குறிப்பாக `ரெட் மீட்' எனப்படும் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும்.