பழங்களை மட்டுமே உணவாக உண்பது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறுமா?

credit: freepik
3 வேளையும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொள்வது உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும். பழங்களில் அத்தியாவசிய புரதம் மற்றும் கொழுப்புகள் இல்லாததால், விரைவில் பசி ஏற்பட வழிவகுக்கும். உடலுக்கு போதுமான ஆற்றலை வழங்காமல் போகலாம்.
credit: freepik
எனவே காலையில் பழங்களை சாப்பிட விரும்பினால் அதனுடன் நட்ஸ்கள், முழு தானியங்கள், முட்டை போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்த்து உட்கொள்ளலாம்.
credit: freepik
பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் சி, ஏ, ஈ. போலேட், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் மற்றும் நார்ச்சத்துகள் நிரம்பி இருந்தாலும் அவற்றை மட்டுமே நம்பி இருப்பது வளர்ச்சிதை மாற்றம், ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
credit: freepik
ஒட்டுமொத்த உடல் நலனுக்கு இந்த சத்துக்கள் மட்டுமே போதுமானது அல்ல. குறிப்பாக புரதம், வைட்டமின் பி12, கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா 3 போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு கிடைக்காமல் போய்விடும்.
credit: freepik
நரம்புகள் மற்றும் ரத்த சிவப்பணுக்களுக்கு வைட்டமின் பி 12 அவசியமானது. மூளை மற்றும் இதய ஆரோக்கியத்துக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் தேவையானது. பழங்களில் இருந்து இவற்றை பெறமுடியாத நிலையில் உடல் பலவீனமடையும்.
credit: freepik
உடலில் புரதம், கொழுப்பு அளவு குறையும்போது வளர்சிதை மாற்றம் மெதுவாகும். அதன் காரணமாக உடல் ஆற்றல் குறைந்துவிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவிலும் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்து பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
credit: freepik
பழங்களில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவக்கூடியது. ஆனால் பழங்களை மட்டுமே உண்பது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை சீர்குலைக்கும். தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க செய்துவிடும்.
credit: freepik
வயிறு வீக்கம், மூளை ஆரோக்கியமும் பாதிப்படையும். பழங்களுடன் காய்கறிகள், பருப்பு வகைகள், முழுதானியங்கள் உள்ளிட்ட அனைத்து வகை ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட் கொள்வதே குடல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.
credit: freepik
Explore