வாரம் இரண்டு முறை கருப்பு கொண்டைக்கடலை?

இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.
சிறுநீர்ப்பெருக்கியாக செயல்படும் பண்பு இருப்பதால், சிறுநீர் அடைப்பை சரி செய்யும் தன்மை, கருப்புக் கொண்டைக்கடலை சுடுநீருக்கு உண்டு.
இதை அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.
கருப்பு கொண்டைக்கடலை இரும்புச்சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.
கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான போலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற பைட்டோ வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன.
இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் சீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
Explore