எண்ணெய் வகைகள்: நாட்டின் பாரம்பரிய மரம், செடி போன்றவைகளின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரபியல் அமைப்பின்படி நமக்கு நல்லப் பலனைத்தரும்.
metaAI
தேங்காய் எண்ணெய்: இதில் உள்ள லாரிக் அமிலம் உடலுக்கு இளமையையும், தோலுக்கு வளமையையும் கொடுக்கும். தலைமுடி அடர்த்தியாக வளரும். இதில் விட்டமின் ஈ சிறிதளவு உள்ளது.
metaAI
நல்லெண்ணெய் : இதில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது இதய ரத்தக்குழாய்களின் எலாஸ்டிக் தன்மை மாறாமல் இதயத்தைப் பாதுகாக்கும்.
metaAI
கடுகு எண்ணெய் : இதில் ஒலியிக் அமிலம், லினோலெனிக் அமிலம் அதிகமாக உள்ளது. இவை இதயம் மற்றும் அனைத்து உடல் உறுப்புகளுக்கும் மிகவும் சிறந்தது.
metaAI
வேர்க்கடலை எண்ணெயிலும் விட்டமின் ஈ மற்றும் ஒலியிக் அமிலம், லினோலியிக் அமிலம் உள்ளதால் இதுவும் உடலுக்கு நன்மையைத் தரும் எண்ணெய் ஆகும்.
metaAI
சூரியகாந்தி விதை எண்ணெய் மற்றும் safflow-er oil இவை இரண்டுமே ஆஸ்டிரேசி (Asteraceae) குடும்பத் தாவரங்கள் ஆகும். இந்த எண்ணெய் நிறைவுறாத கொழுப்பு வகையை சார்ந்தது.
metaAI
இன்னும் பருத்தி விதை எண்ணெய், பனை எண்ணெய், ஆலிவ் எண்ணெய் என்று ஏராளம் இருந்தாலும், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவைகளை சமையலுக்கு பயன்படுத்தினாலே போதுமானது.
metaAI
எந்த எண்ணெய் ஆனாலும் குறைந்த அளவில் உபயோகிப்பது அனைவரது இதயத்திற்கும் நலமானது.