சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீமை சாப்பிடவே கூடாது என்பதல்ல. அவர்கள் தங்கள் ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும் போது ஐஸ்கிரீமை எப்பொழுதாவது சாப்பிடலாம்.
ஐஸ்கிரீமில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட், சுகர், கலோரி மற்றும் நிறைவுற்ற கொழுப்பு இருப்பதாலும், ஊட்டச் சத்துக்கள் குறைவாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக கருதப்படுவதில்லை.
சர்க்கரை நோயாளிகள் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் மூன்று வாரத்துக்கு ஒருமுறை, ஒரு அரை கப் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.
ஐஸ்கிரீம் சாப்பிடும்போது குறைந்த கார்போஹைட்ரேட், கலோரி, சுகர், கொழுப்பு மற்றும் அதிக புரதம் உள்ள ஐஸ்கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஐஸ்கிரீம் உணவுக்கு பின் சாப்பிடுவது நல்லது. அப்படி சாப்பிடும்போது ஐஸ்கிரீமில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் அளவை பேலன்ஸ் செய்வதற்கு உணவில் அன்று உட்கொள்ளக்கூடிய கார்போஹைட்ரேட் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஐஸ்கிரீமின் மேலே டாப்பிங்ஸாக பாதாம், பிஸ்தா போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். இது ஐஸ்கிரீம் சாப்பிட்ட உடனே ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸை தடுக்க உதவுகிறது.
அதிகமான அளவு ஐஸ்கிரீம் உட்கொள்ள கூடாது.
ரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும்போது, அந்த சூழலில், ஐஸ்கிரீம் உண்ண முயற்சிக்க கூடாது. ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ள போதுதான் ஐஸ்கிரீம் சாப்பிடவேண்டும்.