காய்ச்சலுக்கு பிறகு வாய் கசப்பாக இருக்கிறதா? இந்த பழத்தை சாப்பிடுங்க!

காய்ச்சலினால் நாக்கும், வாயும் நன்றாகவே இல்லை, வாய்க்கு என்ன சாப்பிட்டாலும் கசப்பாகவே இருக்கிறது என்று காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான அனைவருமே சொல்வதுண்டு.
காய்ச்சல் வந்தாலே உணவு மூலமும் கைவைத்தியம் மூலமும் சரிசெய்த நம் முன்னோர்கள் வாய்க்கு சுவையை உணரவைக்க எடுத்துகொண்ட பழம் தான் ஆல்பக்கோடா பழம்.
சுவையில்லாத நாக்குக்கு வெறும் சுவையை மட்டுமே கொடுக்ககூடிய பழமாக இதை எடுத்து கொள்ளமுடியாது. இவை ப்ளம்ஸ் வகையை சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் பி. ஏ சத்துகளும், சுண்ணாம்பு மற்றும் உயிர்ச்சத்துகளும் நிறைந்துள்ளன.
இதை சாப்பிட்டால் உடலில் ரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். இரும்புசத்தும் கொண்டிருப்பதால் இவை ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இந்த பழம் உடலுக்கு தெம்பு தரக்கூடியது என்பதால் இதை காய்ச்சல் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் நோயிலிருந்து விரைவாக முழுமை பெறும்.
காய்ச்சலின் போது இதை சாப்பிடுவதால், அவை உமிழ்நீரோடு கலந்து உடலுக்கு வேண்டிய எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
ஆல்பக்கோடா பழத்தை வாயில் போட்டு சுவைத்தால் சிறிது சிறிதாக வாந்தி உணர்வு குறையும். நாக்கில் சுவைமொட்டுகள் சுவையை பொறுமையாக உணரும்.
காய்ச்சலினால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் தொண்டையில் வறட்சி உண்டாகும். தொண்டை வறட்சியை தடுத்து உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க இந்த ஆல்பக்கோடா உதவும்.
நார்ச்சத்து நிறைந்த ஆல்பக்கோடா பழம் மலச்சிக்கலையும் தீர்க்கும். வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் வல்லமை கொண்டது.