பரோட்டா பொதுவாக மைதாவில் செய்யப்படுகிறது. மைதா ஆங்கிலத்தில் (white flour) வைட் ப்ளோர் என்று சொல்வார்கள்.
மைதா என்பது கோதுமை சுத்திகரிக்கப்படும் போது அதன் தவிடு நீக்கப்பட்டு அதன் விதை கூழ் தசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
பொதுவாக தவிட்டில் தான் மெக்னீசியம், மேங்கனீஸ், இரும்பு சத்து, செலினியம் போன்ற தனிமங்கள் இருக்கும். விதைக்கூழ் தசையில் அதிகமான மாவுச்சத்து இருக்கிறது.
ஒரு கப் மைதாவில் 496 கலோரிகளும். 107 கிராம் மாவுச்சத்தும் இருக்கிறது. பரோட்டாவின் சர்க்கரை உயர்தல் குறியீடு 71 ஆகும்.
அதனால் பரோட்டா சாப்பிட்டவுடனே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதில் உள்ள அதிகமான அளவு மாவுச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
பரோட்டா வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து ஜீரண கோளாறுகள் ஏற்படுத்தும்.
மைதாவில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்துவதற்காகவும், மென்மையாக இருப்பதற்காகவும், Bonzyl peroxide (பென்சைல் பெர் ஆக்சைடு மற்றும் Alloxan (அலோக்சான்) போன்ற வேதிப்பொருட்கள் இதில் சேர்க்கப்படுகிறது.
Alloxan (அலோக்சான்) எலிகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் சர்க்கரைநோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோயாளிகள் மைதா பரோட்டாவை தவிர்ப்பது நல்லது.