சமையலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் கடுகு எண்ணெய் சிறந்தது..!

கடுகு எண்ணெய் என்பது கடுகு விதைகளிலிருந்து பெறப்படும் ஒரு வகை எண்ணெய் ஆகும்.
சில ஆராய்ச்சிகள், கடுகு எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.
கடுகு எண்ணெய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இது கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களில் இருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
கடுகு எண்ணெய் தலை முடி உதிர்வதைக் குறைத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவலாம்.
கடுகு எண்ணெய் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடலில் மசாஜ் செய்வதன் மூலம் தேவையற்ற நச்சுப் பொருட்களை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது.
குறிப்பு :சில கடுகு எண்ணெய்களில் எருசிக் அமிலம் உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பரிந்துரைகளை சரிபார்த்து பயன்படுத்துவது அவசியம்.
Explore