மீனில் புரதம், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அடிக்கடி மீன் சாப்பிடலாமா என்று அறிந்து கொள்ளலாம்.
மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும்.
தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்தலாம். இது இதயத்திற்கு இதமானது.
மீனில் இருக்கும் வைட்டமின் டி எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். தினமும் ஏதாவதொரு மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி சத்துக்களின் தேவையை பூர்த்தி செய்துவிடலாம்.
மீன் சாப்பிடுவது மன ஆரோக்கியத்திற்கும் நல்லது. மனச்சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் தினமும் மீன் சாப்பிட்டு வரலாம்.
மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைப்பதோடு, கெட்ட கொழுப்பு சேருவதையும் தடுக்கும்.
முடக்குவாதத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியை குறைப்பதற்கு மீன் உணவு சிறந்த தேர்வாகும். மேலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
மீனில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும், 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு அளவோடு சாப்பிட வேண்டும்.