இனிப்பு பலகாரங்களுக்கு மேலும் சுவை கூட்ட இதை செய்யுங்க!
கேரட் அல்வா கிளறும் போது, பால் ஊற்றுவதற்கு பதிலாக பால்கோவா போட்டுக் கிளறி, ஏதாவது ஒரு எசென்ஸ் சில துளிகள் சேருங்கள். அல்வாவின் சுவை 'அடேங்கப்பா' என்று இருக்கும்.
Photo: MetaAI
கோதுமை அல்வா செய்ய கோதுமையை ஊற வைத்து, அரைப்பதற்கு முன் ஒரு டம்ளர் கோதுமைக்கு, ஒரு ஸ்பூன் பச்சரிசி போட்டு அரைத்து அல்வா செய்தால் குழையாமல் இருக்கும்.
Photo: MetaAI
கேசரி, ஜிலேபி, அல்வா போன்றவற்றில் கலர் பவுடர் சேர்ப்பதற்குப் பதில் கேரட் சாறு எடுத்துச் சேர்த்தால் சுவைமிகும்.
Photo: pixabay
மைசூர்பாக் செய்வதற்காக கடலைப் பருப்பை மாவாக அரைக்கும்போது சிறிதளவு முந்திரிப் பருப்பையும் அதோடு சேர்த்து அரைத்தால் மணமும், சுவையும் கூடுதலாக இருக்கும்.
Photo: pixabay
ரவா கேசரி செய்யும்போது சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை சேர்த்தால் ருசி அதிகமாக இருக்கும்.
Photo: MetaAI
தேங்காய் பர்பி செய்கிறீர்களா? அப்போது ஏலக்காய்த் தூளுக்குப் பதிலாக சிறிது வெனிலா எசென்ஸ் சேர்த்தால் பர்பி 'பலே' சுவையுடன் இருக்கும்.
Photo: MetaAI
அதிரசம் செய்யும்போது மாவை வெல்லத்தோடு கலந்த பின், அதில் துண்டுகளாக நறுக்கிய பேரீச்சம் பழம், உலர் திராட்சை, பொடித்த முந்திரி சேர்க்க,அதிரசத்தின் சுவை அதிரடியாய் கூடும்.
கடலைப்பருப்புடன், வேகவைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த் தூள் சேர்த்து போளி செய்தால் அருமையான சுவையுடன் இருக்கும்.