தினமும் காலையில் எழுந்ததும் காபி, டீ குடிக்கும் வழக்கம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை உப்பு சேர்த்து குடியுங்கள்.
உப்பு சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.
உப்பு சோடியத்தின் ஆதாரமாக கருதப்படுகிறது. இது நரம்பு மற்றும் தசை செயல்பாட்டிற்கு அவசியம். உடலின் திரவ சமநிலையை பராமரிக்கவும், நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கவும் உப்பு உதவுகிறது.
உப்பு நீர் உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டுகிறது. இதனால் உணவு உடைக்கப்பட்டு வயிற்றில் செரிமானம் சீராக இருக்கும்.
வெறும் வயிற்றில் உப்பு நீர் குடிக்கும் போது, இவை உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இது எடை இழப்பு செயல்முறைக்கு உதவுகிறது.
உப்பு நீர், வாயில் உள்ள பாக்டீரியாக்களை குறைத்து வாய் சுகாதாரத்தை பராமரிக்கிறது. இதனால் ஈறுகள் பலவீனமடைவது தடுக்கப்படுகிறது.
உப்பு அயோடின் மூலமாகும். இவை தைராய்டு செயல்பாட்டுக்கு முக்கியமான தாதுக்களின் வளமாக கருதப்படுகிறது. இதை மிதமான அளவு சேர்க்கும் போது தைராய்டு குறைபாடு வராமல் தடுத்துவிடலாம்.
உப்பு உடலில் இருக்கும் மன அழுத்த ஹார்மோன் ஆன கார்டிசோலின் அளவை கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
உப்பு மிதமாக எடுக்க வெண்டும். அதிகமாக சாப்பிடுவது பக்கவிளைவுகளை உண்டு செய்யலாம். இது சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக கற்களை உண்டு செய்யும்.