உணவுக்குப் பிறகு சீரக நீர் குடிப்பது ஏன் நல்லது தெரியுமா?
சீரகத் தண்ணீரை உணவு சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று வாங்க தெரிஞ்சிக்கலாம்.
சீரகத் தண்ணீர் ஜீரணத்தைத் தூண்டுவதோடு, உணவுத் துகள்களை உடைத்து அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் சரியாக உடலுக்குக் கிடைக்க உதவுகிறது.
உணவு உண்டபிறகு, ஒரு கப் அளவு சீரகத் தண்ணீரைக் குடித்து வர, வாய்வுத் தொல்லை மற்றும் வயிறு வீக்கத்தைக் குறைக்கக்கூடும்.
உணவுக்குப்பின், ஒரு கப் அளவு சீரகத் தண்ணீரைக் குடித்து வர, ரத்த அழுத்தம் சீராக இருக்கக்கூடும்.
சீரகத் தண்ணீர் குடிப்பதால், ஜீரண மண்டல்லத்தின் செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவி செய்யும். ஜீரண ஆற்றல் மேம்படும்.
அன்றாட செயல்பாடுகளுக்கும் அவசியமான மெட்டபாலிசத்தை உடலில் அதிகரிக்கச் செய்ய, உணவுக்குப் பின் சீரகத் தண்ணீர் மிக மிக சிறந்தது.
வாயில் வீசும் உணவின் துர்நாற்றத்தைப் போக்கி, வாயைப் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ள உணவுக்குப் பின் ஒரு கப் அளவு இந்த சீரகத் தண்ணீரைக் குடித்து வரலாம்.