தலைமுடியை பராமரிப்பதற்கு தினமும் ஷாம்பு உபயோகிக்கலாமா?

credit: freepik
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் வாரம் ஒருமுறை ஷாம்பு பயன்படுத்துவது நல்லதல்ல. தலைமுடிக்கு பாதிப்பை அதிகரிக்க செய்யும். முடி தடிமன் குறையக்கூடும்.
credit: freepik
வாரம் ஒருமுறையோ, எப்போதாவதோ ஷாம்பு பயன்படுத்துவது தலைமுடியில் இறந்த சரும செல்கள், வியர்வை, அழுக்கு படிந்து உச்சந்தலையில் எரிச்சல், அரிப்பு அல்லது பொடுகுக்கு வழிவகுக்கும். சுற் றுப்புற மாசுபாடுகள் தலையில் படிந்து துர்வாசனை வீசக்கூடும். கூந்தலின் பொலிவு குறையும்.
credit: freepik
எது சிறந்தது?: இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை கொண்டவர்கள் அதிகப்படியான எண்ணெய் படிவதை தடுக்க தினமுமோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
credit: freepik
வறண்ட, சுருள் முடி கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உதிர்தலைக் குறைக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஷாம்பு பயன்படுத்தலாம்.
credit: freepik
மெல்லிய முடி கொண்டவர்களுக்கு எண்ணெய் தன்மையை விரைவாக படியும். அவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது சிறந்தது.
credit: freepik
அடர்த்தியான அல்லது கரடுமுரடான முடி ஈரப்பதத்தை சிறப்பாக தக்கவைத் துக்கொள்ளும் என்பதால் வாரம் ஒருமுறை ஷாம்பு உபயோகப்படுத்தலாம்.
credit: freepik
தினமுமோ, வாரம் ஒருமுறையோ எப்போது பயன்படுத்துவதாக இருந்தாலும் மென்மையான சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவிடும்.
credit: freepik
பலவீனமான, அடிக்கடி முடி உதிரும் பிரச்சினை கொண்டவர்கள் அடிக்கடியோ, தினமுமோ ஷாம்பு பயன்படுத்துவது முடியை பலவீனப்படுத்தும். எப்போதாவது பயன்படுத்துவது வலுவான, ஆரோக்கியமான முடி இழைகளுக்கு வழிவகுக்கும்.
credit: freepik
Explore