தினசரி உங்கள் உணவில் இந்த காய்கறிகளை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்!

credit: freepik
பீர்க்கங்காய்: 'டோரி' என்றும் அழைக்கப்படும் இந்த காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் சி, ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் துணை புரியும்.
credit: wikipedia
கோவைக்காய்: வைட்டமின்கள் ஏ, சி, பி-காம்ப்ளக்ஸ் போன்ற வைட்டமின்களால் இந்த காய் நிரம்பியுள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்துள்ளது. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும், ரத்த ஓட்டத்திற்கும் நன்மை பயக்கும்.
credit: wikipedia
புடலங்காய்: குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய், எடை மேலாண்மையை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவிடும் சிறந்த காய்கறியாகும். வைட்டமின் சி போன்றவைகளும் நிறைந்திருப்பது கூடுதல் பலம் சேர்க்கும்.
credit: wikipedia
சுரைக்காய்: இதனை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் அபரிமிதமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். சுரைக்காயில் வைட்டமின்கள் சி, கே, கால்சியம், மெக்னீசியம் போன்றவையும் நிறைந்துள்ளன. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
credit: wikipedia
பாகற்காய்: இந்த காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வழிவகுக்கும். பாகற்காயில் வைட்டமின்கள் ஏ, சி, கே, இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அபரிமிதமாக நிறைந்துள்ளன.
credit: wikipedia
வெள்ளைப்பூசணி: இதில் வைட்டமின்கள் ஏ, சி போன்றவை மிகுந்துள்ளன. இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாட்டிற்கு முக்கியமான பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளன. உடலின் ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும்.
credit: wikipedia
வெண்டைக்காய்: உடல் எடை மேலாண்மைக்கும், செரிமானத்துக்கும் நன்மை பயக்கும். வைட்டமின்கள் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மிகுந்தது. உடலின் இணைப்பு பகுதிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
credit: wikipedia
Explore