இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன.
நார்ச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம் சாப்பிடும்போது, குடல் ஆரோக்கியம் மேன்மை அடைந்து, ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
பேரீச்சம்பழத்தை குளிர்காலத்தில் சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து அனீமியாவைத் தடுக்கலாம்.
பேரீச்சம் பழத்ததில் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குபவை.
குளிர்காலத்தில் பொதுவாக நம்முடைய உடலின் வெப்பநிலை சமநிலையின்றி இருக்கும். இதை சமன்படுத்தி, உடலைக் கதகதப்பாக வைத்துக் கொள்வதற்கு பேரீச்சம்பழம் உதவி செய்யும்.
இந்த பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், காப்பர், மக்னீசியம் ஆகியவை நிறைந்திருக்கின்றன. இவை எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியவை.
குளிர் மற்றும் மழைக்காலத்தில் நோய்த் தொற்றுக்கள் மிக எளிதாக பாதிக்கும். இவை நம்மை பாதிக்காமல் இருக்க பேரீச்சம்பழத்தை சாப்பிடலாம். இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.
பேரீச்சம்பழத்தில் மெக்னீசியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் பண்புகள் காணப்படுவதால் இவை மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கலாம்.
பேரீச்சம்பழங்களில் பீட்டா-டி-குளுக்கன் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளன, இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்கலாம்.