சிக்கு (சப்போட்டா) ரவா கேசரி..!

தேவையான பொருட்கள்: சப்போட்டா பழம்- 8 ,சர்க்கரை- 1/2கப், ரவை- 1/2கப், பால்- 1/4கப், நெய்- 1/4கப், பாதாம், முந்திரி, பிஸ்தா- 1/2கப், ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன் ஆகியவை
செய்முறை: நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தோல் நீக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய நட்ஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் ஊற்றி சூடானதும், நறுக்கி வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து தனியே எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் அதே கடாயில் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். அடுத்து அதில் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும்.
அதன்பிறகு சர்க்கரை சேர்த்து கட்டி ஏற்படாமல் நன்கு கலக்கவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். மேலும் கொஞ்சம் பால் சேர்த்து இந்த கலவையை மூடி வைக்க வேண்டும்.
பின்னர் வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.
Explore