சமையல் டிப்ஸ்..!

ஆம்லெட் செய்யும் போது கொஞ்சம் வெங்காயத்துடன் தக்காளி சேர்த்தால் முட்டை வாசனை வராது. ருசியும் கூடும்.
பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசிறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது.
சாம்பார் செய்து இறக்குவதற்கு முன் 2 தக்காளிகளை மிக்சியில் அரைத்து சேர்க்க அதிக ருசி கிடைக்கும்.
மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காயை இட்லி தட்டில் வைத்து சிறிது நேரம் வேக வைத்து, ஊறுகாய் போட்டால் விரைவாக ஊறும், சத்துக்களும் வீணாகாது.
லேசான தீக்காயம் என்றால் ஒரு வாழைப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி சூடுபட்ட இடத்தில் வைத்தால் குளுகுளுவென்று இருக்கும். அரிப்பு ஏற்படாது.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
கீரை சமைக்கும் போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேகவைத்தால் கீரையின் நிறம் மாறாது.
வீட்டில் எறும்பு நடமாட்டம் இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.
Explore