அரிய கனிம வளங்களை அதிகம் கொண்ட நாடுகள் எவை தெரியுமா?
பூமியில் காணப்படும் 17 முக்கிய தாதுக்களாக விளங்கும் 'ரேர் எர்த் கனிமங்களின்' பங்களிப்பு முக்கியமானது. நியோடிமியம், லான்தனம், சீரியம், இட்ரியம் போன்றவை முக்கிய அரிய வகை கனிமங்களாகும்.
இந்த கனிமங்களை ஸ்மார்ட்போன், மின்சார கார்கள், காற்றாலை மின்சக்தி உற்பத்தி, ராணுவ உபகரணங்கள் போன்ற பல நவீன தொழில்நுட்பங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.
இவை உண்மையில் அரிய வகை கனிமங்கள் இல்லை. ஆனால் அவற்றை கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலானது. எந்தெந்த நாடுகளில் இந்த கனிம வளங்கள் அதிகம் காணப்படுகின்றன என்பது பற்றி பார்ப்போம்.
சீனா : உலகிலேயே சீனாவிடம்தான் இந்த வகை அரிய கனிமங்கள் அதிகம் உள்ளன. 2025-ம் ஆண்டு நிலவரப்படி மொத்த கனிம இருப்பு 44 மில்லியன் டன் ஆகும்.
பிரேசில் : அரிய வகை கனிம இருப்பு கொண்ட உலகின் இரண்டாவது நாடு பிரேசில். இதன் இருப்பு சுமார் 21 மில்லியன் டன்.
இந்தியா : அரிய வகை கனிம இருப்பு கொண்ட நாடுகளில், உலகில் 3-வது இடத்தில் இந்தியா உள்ளது. மொத்த கனிம இருப்பு சுமார் 6.9 மில்லியன் டன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா : சுமார் 5.7 மில்லியன் டன் கனிம இருப்பு கொண்டுள்ள ஆஸ்திரேலியா உலகில் 4-வது இடத்தில் உள்ளது. இது தனது சுரங்க நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
ரஷியா : 5-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் கனிம இருப்பு சுமார் 3.8 மில்லியன் டன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.