மண்ணின் பொக்கிஷம் "பருப்பு கீரை" இவ்வளவு நல்லதா?

மண்ணின் பொக்கிஷம் "பருப்பு கீரை" இவ்வளவு நல்லதா?

Published on
நாம் தினந்தோறும் அன்றாட வேலைகளை செய்ய நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்வோடும் வைப்பதற்கு நம் உடலில் உள்ள சத்துகளின் நிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் உடலில் சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க நாம் உண்ணும் உணவில் தினமும் காய்கறிகளுடன் கீரை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்படி கீரைகளில் அதிக சத்து உள்ள பருப்பு கீரை பற்றி தான் இன்று பார்க்கப் போகிறோம்..!
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒமேகா-3 சத்தானது பருப்பு கீரையில் ஏராளம் நிறைந்துள்ளன.
ஒமேகா-3 குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாகும். இது, ஆட்டிசம் போன்ற வளர்ச்சி குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.
பருப்பு கீரை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைப்பதுடன், இதயத்தை சுற்றி படியும் கொழுப்பையும் தடுக்கிறது.
வைட்டமின்-ஏ சத்தும் இருப்பதால் தோல் எப்போதும் பொலிவுடன் இருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்தவும், கண் பார்வை தெளிவாக இருக்கவும் இந்த கீரை உதவுகிறது.
கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் தீரும். உடல் எடையை குறைக்கும் மற்றும் குடல் நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
ஆஸ்டியோபோரோசிஸ், சொரியாசிஸ் போன்ற நோய்களுக்கு பருப்பு கீரை அருமருந்தாக உள்ளது, என்று நாட்டு மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com