சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பேரீச்சம்பழ அல்வா செய்முறை!
Photo: MetaAI
தேவையான பொருட்கள்: பேரீச்சம்பழம் -250 கிராம் (விதை நீக்கி பொடியாக நறுக்கியது), சர்க்கரை -250 கிராம், நெய் -200 கிராம், பால் -1/2 கப், பாதாம் பருப்பு -10, முந்திரிப்பருப்பு -10, குங்குமப்பூ -2 சிட்டிகை, வெந்நீர் -1 கப்
Photo: MetaAI
செய்முறை: முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி போட்டு, அதனுடன் வெந்நீர் விட்டு ஊற வைக்கவும்.
Photo: MetaAI
பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிது அதிகமாக வெந்நீரை ஊற்றி, 5 மணி நேரம் நன்றாக ஊறவிட வேண்டும்.
Photo: MetaAI
பேரீச்சம்பழம் நன்கு ஊறிய பின்பு, மிக்சியில் பேரீச்சம் பழத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
Photo: MetaAI
ஒரு தட்டில் சிறிறு வெண்ணெய் அல்லது நெய்யைத் தடவி வைக்கவும். பின்பு அடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை கலந்து பாகு காய்ச்சவும்.
Photo: MetaAI
சர்க்கரை இளம்பாகு பதத்தை அடைந்ததும், அதனுடன், அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது, நெய் சேர்த்து நன்றாக கரண்டியால் கிளறவும்.
Photo: MetaAI
பின்பு அதனுடன் முந்திரிப்பருப்பு, குங்குமப்பூ, பாதாம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக கரண்டியால் கிளறவும்.
Photo: MetaAI
ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை அடைந்ததும் கடாயை அடுப்பிலிருந்து இறக்கி, பேரீச்சம்பழ அல்வாவை வெண்ணெய் அல்லது நெய் பூசிய தட்டில் கொட்டி நன்றாகப் பரப்பி விடவும்.
Photo: MetaAI
அதன் மேல் கத்தியால் விரும்பிய வடிவங்களில் வெட்டி துண்டு போட்டு சாப்பிடலாம். சுவையான பேரீச்சம் பழ அல்வா உங்கள் நாவில் நடனமாடும்.