சுவையான திண்டுக்கல் பேமஸ் பால்பன்..!

சுவையான திண்டுக்கல் பேமஸ் பால்பன்..!

Published on
திண்டுக்கல் பேமஸ் பால்பன் ஒரு தடவை வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் கடையில வாங்கவே மாட்டீங்க வீட்லயே செஞ்சு சாப்பிடுவீங்க.
தேவையான பொருட்கள்: மைதா மாவு, சர்க்கரை, ஏலக்காய் தூள், தயிர், நெய், உப்பு, பேக்கிங் சோடா, எண்ணெய் ஆகியவை.
செய்முறை: முதலில் போதுமான அளவு சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் மைதா மாவு, ஏலக்காய் தூள், தயிர், பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் உப்பு நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் இளக்கமாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து 'பாகு' தயாரித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக சேர்த்து பொரித்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்தால் சுவையான பால்பன் தயார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com