தூசு அலர்ஜியை கட்டுப்படுத்த உதவும் முக்கிய உணவு வகைகள்!

தூசு அலர்ஜியை கட்டுப்படுத்த உதவும் முக்கிய உணவு வகைகள்!

Published on
கிரீன் டீ வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தக்கூடியது. நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மூக்கில் ஏற்படும் எரிச்சலையும் போக்கக் கூடியது
மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. இதனை சூடான பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
தேன் பல்வேறு நன்மைகளை வழங்கும் மற்றொரு சிறந்த சூப்பர் உணவு வகையை சேர்ந்தது. இது அழற்சி எதிர்ப்பு அறிகுறிகளை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஒவ்வாமை அறிகுறிகளை குறைக்கவும் தேனை போன்றே லவங்கப்பட்டையையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பாதாம், முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்து மதிப்பு மிக்கவை. அவை, உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
தக்காளியில் லைகோபீன் என்ற சேர்மம் உள்ளது. மேலும் லைகோபீன் உடல் செல்களை பாதுகாக்கக்கூடியது. சேதமடைந்த சரும செல்களை குணப்படுத்தக்கூடியது.
தூசு ஒவ்வாமையால் சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க இஞ்சி உதவும்.
சால்மன் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளடங்கி இருக்கின்றன. அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை.
வெங்காயத்தில் ஹிஸ்டமைன் என்ற சேர்மம் உள்ளது. ஹிஸ்டமைன் என்பது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக உடல் வெளியிடும் ஒருவகை சேர்மமாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com