all photo using metaAI
all photo using metaAI

எளிய முறையில் செய்யலாம் சுவையான முட்டை குழம்பு..!

Published on
அவித்த முட்டையோடு, குழம்பு கொதிக்கும் போது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி வேக வைப்பது இன்னும் சுவையைக்கூட்டும். இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: முட்டை - 5 ,வெங்காயம் - 1,பூண்டு - 7 பல், தக்காளி - 1,உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, சாம்பார் மிளகாய்த்தூள் - 2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள் - 1 மல்லித்தூள் 1 என்னும் விகிததில், புளிச்சாறு - 2 மேஜைக்கரண்டி ஆகியவை.
செய்முறை :4 முட்டையை அவித்து ஒட்டை உடைத்து விட்டு மேல் சிறிய கீறல்கள் போடவும். இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டையின் சுவையைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
வெங்காயம், தக்காளி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், வெந்தயம் போட்டு தாளித்த பின் வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்
புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும் போது தீயை சிம்மில் வைத்து 1 முட்டையை உடைத்து நிதானமாக குழம்பின் நடுவில் ஊற்றவும்.
இரண்டு நிமிடம் இளந்தீயில் கொதித்தபின் தீயை கூட்டவும். நன்கு கொதிவரும்போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொதிக்க விடவும். சுவையான முட்டை குழம்பு தயார்.
குறிப்பு : முட்டையை உடைத்து ஊற்றும் போது கண்டிப்பாக தீயை குறைக்கவேண்டும். இல்லாவிட்டால் முட்டை பிரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com