உணவு முறை: அதிக நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவரா.. பைல்ஸுக்கான வாய்ப்பு அதிகம்.!!
நம் உடலின் ஆசனவாயில் உள்ள ரத்தக்குழாயில் வீக்கம் உண்டாகி, மலம் கழிக்கையில் அதீத வலி மற்றும் இரத்த கசிவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவது ஆகும்.
நார்ச்சத்தின் சிறந்த மூலமாக ஆப்பிள் பழங்கள் உள்ளன. இந்த நார்சத்து மலம் திடமாக வெளியேறுவதை தடுத்து, மலம் கழிக்கையில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை குறைக்கிறது.
வெள்ளரிக்காய் மூல நோய்க்கான சிறந்த தேர்வாகும். இது செரிமான செயல்பாட்டை எளிமையாக்க தேவையான திரவத்தை குடல் பகுதியில் சுரக்க வைக்கிறது. இது, மலத்தை வலி இன்றி வெளியேற்ற உதவுகிறது.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் காணப்படும் வைட்டமின் சி நரம்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது ஆசன வாயில் வீக்கமடைந்ந நரம்புகளை குணப்படுத்த உதவுகிறது.
பேரிக்காயில் காணப்படும் நார்ச்சத்து, செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, மலம் கழிக்கையில் ஏற்படும் வலியையும் குறைக்கிறது.
ஆளி விதை நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தில் சிறந்த மூலமாகும். இஇது சீரான செரிமான செயல்பாட்டுக்கு உதவுகிறது. மேலும் ஆசன வாயில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டுள்ள அழற்சியை குணமாக்கவும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் அதிகம் காணப்படும் பெக்டின் மற்றும் நார்ச்சத்து செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. இதில் காணப்படும் ஸ்டார்ச் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
உலர் திராட்சையில் காணப்படும் டார்டாரிக் அமிலம், ஒரு சிறந்த மலமிளக்கும் பொருளாக செயல்பாடுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையினை போக்கி, சீரான செரிமான செயல்பாட்டிற்கு உதவக்கூடும்.