வெள்ளை பட்டாணி தினமும் சாப்பிடுவது எவ்வளவு பயனுள்ளதாகும்?

வெள்ளை பட்டாணி புரதம் மற்றும் நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். இதில் தயாமின், போலிக் அமிலம், இரும்பு, தாமிரம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இதில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
வெள்ளை பட்டாணி இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
இதில் துத்தநாகம் அதிகமாக இருப்பதால், இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.
இதில் உள்ள துத்தநாகம் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
வெள்ளை பட்டாணியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அவை உடலில் ஹீமோகுளோபின் மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் செறிவை அதிகரிக்க உதவுகிறது.
வெள்ளை பட்டாணியில் டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் உற்பத்தியை ஊக்குவித்து, மனநிலையை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வெள்ளை பட்டாணி ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
Explore