இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்: முருங்கைக்கீரை, கறிவேப்பிலைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, கொண்டைக் கடலை, பேரீட்சை மற்றும் அத்திப் பழம் ஆகியவற்றில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
Photo: MetaAI
வைட்டமின் டி; முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி, இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருள்கள், பிஸ்தா, இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.
credit: freepik
அயோடின்; கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.
credit: freepik
செலினியம்: பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன் இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.
Photo: MetaAI
மெக்னீசியம்: தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, மீன் வகைகளில் உள்ளது.
Photo: MetaAI
துத்த நாகம்: கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் போன்றவற்றில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.
Photo: MetaAI
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிப்ளவர், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.