தீபாவளி ஸ்பெஷல்: சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த சாமை அல்வா!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: சாமை -1 கப், தண்ணீர் -2 கப், நெய் -½கப், வெல்லம் -½கப், ஏலக்காய்த் தூள் -4 ஸ்பூன், முந்திரி, உலர் திராட்சை -தேவையான அளவு
Photo: MetaAI
செய்முறை:முதலில் சாமையை சுத்தமாக கழுவி, குறைந்தது 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
Photo: MetaAI
ஏனெனில் ஊறிய சாமை, வேக வைக்க எளிமையாக இருக்கும். பிறகு ஒரு பாத்திரத்தில், ஊறவைத்த சாமையை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
Photo: MetaAI
சாமையும் அரிசி போலவே இருப்பதால் அதை எடுத்து அழுத்திப் பார்த்தே வெந்துவிட்டதா என அறிய முடியும். சாமை வெந்த பிறகு தண்ணீரை வடித்து அதை எடுத்து வைக்கவும்.
Photo: MetaAI
அதன் பிறகு ஒரு வாணலியில் நெய் விட்டு, உருகும் வரை காத்திருக்கவும். உருகிய நெய்யில், வேகவைத்த சாமையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
Photo: MetaAI
நெய்யும் சாமையும் நன்றாக கலந்த பிறகு அதில் வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் உருகி சாமையோடு சேரும் வரை நன்றாக கிளற வேண்டும்.
Photo: MetaAI
அதன் பிறகு அதில் ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சாமை அல்வா தயார்.
Photo: MetaAI
Explore