ரஷ்யா அதிபர் புதினுக்கு பரிமாறப்பட்ட குச்சி காளான்களில் இவ்வளவு நன்மைகளா?

அரிய வகை குச்சி காளான்களில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் டி மற்றும் பி நிறைந்துள்ளன. மேலும் இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ், மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களையும் வழங்குகின்றன.
குச்சி காளான்களில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
குச்சி காளான்களில் அதிக பொட்டாசியம் உள்ளடக்கம் உள்ளது. இது ஒட்டுமொத்த சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் சிறந்த தீர்வாகும்.
குச்சி காளான்கள் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் மற்றும் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் ஈறு நோயைத் தடுக்க உதவும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
இயற்கையான முறையில் குளுக்கோஸ் அளவைக் குறைக்க குச்சி காளான் சிறந்த தேர்வாகும். இது நீரிழிவு நோயை நிர்வகிக்க அல்லது தடுக்க உதவுகிறது.
குச்சி காளான் வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கும் ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளன.
குச்சி காளான்களில் உள்ள பாலிசாக்கரைடுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பரவலைத் தடுக்க உதவும் கட்டி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், தசைகள் சீராக செயல்படவும் அவசியமான கால்சியத்தை உறிஞ்ச குச்சி காளான் உதவுகிறது.
குச்சி காளான்கள் கெட்ட LDL கொழுப்பைக் குறைக்கவும், நல்ல HDL கொழுப்பை அதிகரிக்கவும் உதவும். இவை இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
Explore