இயக்குநர் செல்வராகவனின் மனைவி விவாகரத்து கோருகிறாரா?
2000-களில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்தவர் செல்வராகவன்.
இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய சிறந்த திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர்.
பின்னர், செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், தன் கணவர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து கீதாஞ்சலி நீக்கியுள்ளார். இது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், “அடுத்த 6 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது'” எனக் கூறியிருந்தார்.
அதனையும் இதையையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். செல்வராகவன் தன் மனைவியுடான புகைப்படங்களை எதையும் நீக்கவில்லை.