பல் துலக்கும் பிரஷை மாற்றுவதற்கான சரியான நேரம் தெரியுமா?

credit: freepik
பல் மருத்துவர்களின் கருத்துப்படி, மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும்.
credit: freepik
மேலும் தேய்ந்தோ, உடைந்தோ போய்விடும். அதனை பயன்படுத்தினால் பற்களுக்கு இடையே இருக்கும் உணவுத்துகள்களை அகற்றும் செயல்திறன் குறைந்து போகும். ஈறுகளுக்கும் சேதம் ஏற்படுத்தும்.
credit: freepik
ஏனென்றால் பிரெஷில் இருக்கும் இழைகள், தொய்வடையாமல் இருந்தால்தான் பற்களுக்கு இடையேயும், ஈறு பகுதிகளிலும் சிறப்பாக செயல்படும். பழைய இழைகள் ஈறுகளை பாதுகாப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்யும்.
credit: freepik
அத்துடன் பழைய இழைகளில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சை காளான்கள் படியக்கூடும். அவை வாய்வழி சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும். பற்களில் கிருமிகள் பெருக காரணமாகி ஈறுகளை சிதைக்கக்கூ டும்.
credit: pixabay
பிரஷ் இழைகள் தேய்ந்தாலோ, சேதம் அடைந்தாலோ 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. உடனே மாற்றிவிடுவதுதான் பற்களுக்கு பாதுகாப்பானது.
credit: pixabay
குறிப்பாக குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக தேய்ந்துவிடும்.
credit: pixabay
பிரஷ்களை மூடிய நிலையில் வைத்திருப்பதால் ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா வளரக்கூடும். திறந்த நிலையில் வைப்பதன் மூலம் காற்றோட்டம் கிடைத்து, பிரஷ் உலர்ந்து பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
credit: pixabay
Explore