இரவில் 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

credit: freepik
உடல் எடை: தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும்.
credit: freepik
ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும்.. இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.
credit: freepik
ரத்தத்தில் சர்க்கரை அளவு: தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
credit: freepik
உடலின் ஆற்றல்: இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது.
credit: freepik
தூக்கத்தை வரவழைக்கும்: இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.
credit: freepik
இதய ஆரோக்கியம்: இரவு உணவை தாமதமாக உட்கொள்ளும் போது அவை இதயத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். குறிப்பாக அதிக கலோரிகள் கொண்ட ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை உட்கொள்வதால் இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
credit: freepik
செரிமானம் மேம்படும்: இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
credit: freepik
Explore