மொட்டை அடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் கூட, மொட்டை அடிப்பதற்கும் முடியின் வளர்ச்சி, வேகம் மற்றும் அடர்த்திக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் மரபணுவைப் பொறுத்து தான் முடி வளர்ச்சியும் இருக்கும்.
Photo: MetaAI
முடி கொட்டாமல் ஆரோக்கியமாக இருக்க அன்றாடம் உட்கொள்ளும் உணவில் வைட்டமின் ஏ,சி,டி,ஈ மற்றும் இரும்புச்சத்து, துத்தநாகம் முதலானவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்
Photo: MetaAI
முக்கியமாக தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டும். அதிலும் வாரத்தில் ஒருமுறையாவது எண்ணெய் வைத்து குளிக்க வேண்டும்.
Photo: MetaAI
அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் சல்பேட் இல்லாததாக இருக்க வேண்டும். உங்கள் ஷாம்பூ தான் உங்கள் முடியின் மென்மையையும், முடி உதிர்வதையும் தடுக்கும் திறன் கொண்டது.
Photo: MetaAI
தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சமயம், இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.
Photo: MetaAI
அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் போன்றவையும் தலைமுடியைக் கொட்டச் செய்யும்.
Photo: MetaAI
பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு வரும் ரப்பர் , பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும்.