மலர்களின் ராணி ரோஜா பூவில் இத்தனை மருத்துவ நன்மைகளா?

credit: freepik
மருத்துவ குணம் கொண்ட ரோஜா மலர்கள் எடை இழப்பு, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை, குடல் புண் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு ரோஜா இதழ்கள் அருமருந்தாக இருக்கிறது.
credit: freepik
ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவில் இருந்து எடுக்கப்படும் தைலம் காது வலி, காது குத்தல், காது புண் ஆகியவற்றை குணமாக்கும்.
credit: freepik
ரோஜா குல்கந்தை சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் அடைந்து சருமம் பளபளப்பாகும். ரோஜா சர்பத்தை அருந்தினால் மூலச்சூடு, மலச்சிக்கல், குடலில் புண் குணமாகும்.
credit: freepik
ரோஜா இதழ்களை ஒரு கையளவு எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அதில் பாதியை எடுத்து சர்க்கரையை சேர்த்து காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் விலகும்.
credit: freepik
ரோஜா பூ கஷாயத்துடன் கருஞ்சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகர்ந்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தால் ஏற்படக்கூடிய பல்வேறு வகை கோளாறுகள் அகலும்.
credit: freepik
ரோஜாப்பூ நிறைய கிடைக்கும்போது ரோஜா பூவை நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை கஷாயம் போட்டு குடித்தால் உடம்பிற்கு மிகவும் நல்லது.
credit: freepik
சூரிய கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் நீங்க, ஒரு ஸ்பூன் அரைத்த ரோஜா இதழ்களை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை சேர்த்து இந்த கலவையை சருமத்தில் தடவினால் சருமம் பளபளப்பாகக் காணப்படும்.
credit: freepik
Explore