all photo using freepik
all photo using freepik

நாம் பயன்படுத்தும் செல்போன் முறை தவறானதா?

Published on
செல்போனை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் நாம் அன்றாடம் செல்போனை பயன்படுத்தி வருகிறோம். செல்போனை பயன்படுத்துவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது.
போன் வரும் போது தான் ரேடியேசன் இருக்கும். போன் ரிங்கிங் ஆவதை விட வைப்ரேசன் தான் அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தும். எனவே சைலண்ட் மோடு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
எந்த நேரமும் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதும் மனிதனின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். எனவே நேரத்தை குறைத்து பேசுவது நல்லது.
ஸ்மார்ட் மொபைலில் ரேடியேஷனை குறைப்பதற்கான கருவிகள் மொபைலில் பொருத்தப்பட்டிருக்கும். செல்போனை இடது புறம் காதில் வைத்து பேசுவது நல்லது.
சட்டைப் பையில் மொபைலை வைப்பதை விட பேண்ட் பாக்கெட்டில் வைப்பது சிறந்தது.
போன் பேசிக்கொண்டிருக்கும் போது காது அருகே சூடாகிக் கொண்டே இருந்தால் அந்த போனை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் அதிக சூடு போன் வெடிப்பை ஏற்படுத்தலாம்.
பைக்கில் செல்லும் போது அப்படியே எடுத்து பேசுவதும் கூடாது. பைக்கை நிறுத்திவிட்டு பேசுவது நல்லது. ஏனென்றால் விபத்தை ஏற்படுத்தக்கூடும்.
சார்ஜ் ஆகும்போது போன் வந்தால் அப்படியே பேசக் கூடாது. ஆப் செய்துவிட்டு பேசுவது நல்லது.ஏனென்றால் மின்சாரம் தாக்குவதற்கான அபாயம் அதிகம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com