காலை உணவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்ண வேண்டும். அந்த வகையில் நம்முடைய பாரம்பரிய உணவு, முழு தானிய உணவு ஆகியவற்றை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
credit: freepik
மதிய உணவைப் பொறுத்தவரை கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கொழுப்பு ஆகியவை அடங்கிய உணவை எடுத்துக் கொள்ளலாம்.
credit: freepik
இரவு நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவு வகைகளை குறைந்த அளவில் உட்கொள்வதே எப்பொழுதும் நன்மையை ஏற்படுத்தும்.
credit: freepik
ஒவ்வொரு நேர உணவை உட்கொண்டு முடித்ததும் அடுத்த உணவுக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இடைவெளி அவசியம். எப்பொழுதுமே காலை உணவை உறங்கி எழுந்த இரண்டு மணி நேரத்திற்குள் உண்பதே நல்லது.
credit: freepik
காலை உணவு 7 முதல் 9 மணிக்குள்ளாகவும், மதியம் 2 மணிக்குள்ளாகவும், இரவு 8.30 மணிக்குள்ளாகவும் உண்பதே சிறந்தது.
credit: freepik
இரவு உணவைப் பொறுத்தவரை உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே உண்பது நல்லது. அப்பொழுதுதான் தூக்கத்திற் கான ஹார்மோன் சரியாக வெளிப்பட்டு நல்ல தூக்கம் ஏற்படும்.
credit: freepik
காய்கறி வகைகளை அதிகமாக உணவில் நாம் அனைவருமே சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை தவறாமல் உட்கொள்வது அவசியம்.
credit: freepik
வெயில் காலங்களில் செயற்கையான குளிர் பானங்கள், எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் ஆகியவற்றை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.