தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய புகழ்பெற்ற கோவில்கள்!
Photo: wikipedia
மீனாட்சி அம்மன் கோவில்; மதுரை மாநகரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் மீனாட்சி அம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. நகரின் மைய பகுதியில் மிக பிரமாண்டமான கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும்.
Photo: wikipedia
தஞ்சாவூர் பெரிய கோவில்: இந்த கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.
Photo: wikipedia
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்; முக்கிய புனித தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஒன்றாகும். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
Photo: wikipedia
ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில்; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது மட்டுமல்ல. பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது என்ற வரலாறும் இதற்கு உண்டு.
Photo: wikipedia
மகாபலிபுரம் கடற்கரை கோவில்: இதை 8ம் நூற்றாண்டில் பல்லவர்கள் கட்டினார்கள். தென்னிந்தியாவின் கற்களால் கட்டுமானம் செய்யப்பட்ட கோவில்களில் மிகவும் தொன்மையானதாகும்.
Photo: wikipedia
சிதம்பரம் நடராஜர் கோவில் : மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது சிதம்பரம் கோவில். அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது.
Photo: wikipedia
திருச்செந்தூர் முருகன் கோவில்: முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இதுவும் ஒன்றாகும், இது மற்ற ஐந்து மலைக் கோவில்களைப் போன்று இல்லாமல், கடலோரத்தில் அமைந்துள்ள தனித்துவமான தலம்.
Photo: wikipedia
அண்ணாமலையார் கோவில்: திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.