கால்களில் உள்ள இறந்த சருமத்தை நீக்க உதவும் மீன் ஸ்பா!

Photo: MetaAI
முக அழகுக்கு முக்கியத்துவம் தருவது போலவே பாதங்களின் பராமரிப்பும் முக்கியமானது. மீன் ஸ்பா என்பதை மீன் பெடிக்யூர் என்றும் சொல்லலாம். இதற்கு, காரா ரூபா என்ற மீன்களைப் பயன்படுத்துகின்றனர்.
Photo: MetaAI
நம் கால்களில் உள்ள இறந்த செல்கள் மீன்களின் பிரதான உணவு என்பதால் அவற்றை முழுமையாக நீக்க மீன் ஸ்பா சிறந்தது.
Photo: MetaAI
காரா ரூபா மீனுக்கு, 'டாக்டர் பிஷ்' என்ற பெயரும் உண்டு, ஏனெனில், இது நம் காலில் உள்ள வறண்ட சருமத்தை சரி செய்து, புத்துயிர் அளிக்கிறது. எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.
Photo: MetaAI
மீன்கள், நம் கால்களில் சிறந்த அழுத்தத்தை கொடுத்து, நுணுக்கமாக மசாஜ் செய்கிறது. இதனால் நம் கால்களில் ரத்த ஓட்டம் அதிகரித்து, காலின் வறண்ட பகுதி மேம்படுகிறது.
Photo: MetaAI
உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்களை வெளியிடவும் தூண்டும். இதன்மூலம் மன அழுத்தம் குறைந்து, மன ஆரோக்கியம் மேம்படும்.
Photo: MetaAI
சிலருக்கு பல்வேறு காரணங்களால் கால் கரடுமுரடாக இருக்கும். அவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்ளும்போது காலில் உள்ள இறந்த செல்கள் மட்டுமின்றி, சரும வறட்சியும் நீங்கும்.
Photo: MetaAI
கடுமையான தோல் நோய்த் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய நோய் பாதிப்பு கொண்டவர்கள் மீன் ஸ்பா மேற்கொள்வதைத் தவிர்ப்பது சிறந்தது.
Photo: MetaAI
Explore