வாழ்க்கையை ரசித்து வாழ இதை பின்பற்றுங்கள்..!

வாழ்க்கையின் இறுதி காலகட்டத்தில்தான் பலரும் தமக்காக வாழவில்லையே என்று ஏக்கம் கொள்வார்கள். இளம் வயதோ, முதிய பருவமோ எந்த காலகட்டத்தில் வாழ்ந்தாலும் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.
நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுங்கள் : உங்கள் நட்பு வட்டம் எப்படிப்பட்டதோ அதை கொண்டே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை தீர்மானித்துவிடலாம்’ என்பார்கள். அதனால் நல்ல பழக்கங்களை பின்பற்றும் நண்பர்களிடம் நட்புறவை வலுவாக்குங்கள்.
தகுதியானவர்களை தேர்ந்தெடுங்கள் : நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், எடுத்த காரியங்களில் வெற்றிவாகை சூடுபவராகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நெருக்கமான நலம் விரும்பிகளுடனான தொடர்பை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.
மாற்றங்களை எதிர்கொள்ளுங்கள் : சிலர் தங்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை பார்த்து அஞ்சுவார்கள். மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை நம்புங்கள். உங்கள் வாழ்க்கையில் இல்லாத விஷயங்களை நீங்கள் மாற்ற முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
எதிர்காலம் பற்றிய இலக்கு அவசியம் : கடந்த காலத்தில் நடந்து முடிந்த விஷயங்களை பற்றி சிந்திப்பதை தவிருங்கள். வாழ்க்கையில் முன்னேற விரும்புபவர்களுக்கு அதுதான் மிகப்பெரிய எதிரியாக அமையும். அதற்கு இடம் கொடுக்காமல் எதிர்காலம் பற்றிய இலக்கை நிர்ணயுங்கள்.
தாமதம் கூடாது : முக்கியமான விஷயங்களை கூட தாமதமாக செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கிவிடும். அப்படி தாமதப்படுத்துவது உங்களின் செயல்பாட்டை முடக்கி தேவையற்ற மன அழுத்தத்தையும் ஏற்படுத்திவிடும். உங்களுக்கான நேரத்தையும், வேலை நேரத்தையும் நிர்வகித்து அதன்படி செயல்பட பழகுங்கள்.
சுயநலமாகவும் செயல்படுங்கள் : மகிழ்ச்சியாக இருக்க முக்கியமானது உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவதுதான். குடும்ப நலன், உறவுகள், நட்புகளின் நலன் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறீர்களோ அதற்கு ஒருபடி மேலாக உங்கள் நலனின் மீது கவனம் கொள்வது அவசியமானது. இந்த சுயநலம் வாழ்க்கைக்கு முக்கியமானது, அவசியமானது.
தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள் : புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு வயது தடையாக இருக்கக்கூடாது. உலகம் மிகப் பெரியது. ஒவ்வொரு நாளும் புது புது தொழில்நுட்பங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்ப நம்மை நாமே ‘அப்டேட்’ செய்து கொள்வது நல்லது.