இஞ்சி : இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதனால் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எளிதாக விரட்டலாம். அதனால் இஞ்சியை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
credit: freepik
பாதாம் : பாதாமில் மெக்னீசியம், புரதம், ரிபோப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் உள்ளன. வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.
credit: freepik
பூண்டு :இது வைட்டமின் சி, பி, துத்தநாகம் மற்றும் போலேட் போன்ற சத்துக்களின் கலவையாக விளங்குகிறது. குளிர்கால நோய் பாதிப்புகளான சளி மற்றும் இருமல் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.
credit: freepik
கிரீன் டீ: இது ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராக போராடக்கூடியது.
credit: freepik
துளசி : நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் துளசி இலையில் உள்ளன. சுவாச மண்டலத் துக்கு புத்துயிர் அளிக்கக்கூடியது.
Photo: wikipedia
மஞ்சள் :மஞ்சள் ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பப்பெற்றது. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டது. குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உணவில் மஞ்சள் இடம் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
credit: freepik
காளான்: இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், நியாசின் மற்றும் போலிக் அமிலங்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக இருக்கும்.